Thursday, December 13, 2018

Fiverr Profile ஐ வடிவமைப்பது எப்படி? | Fiverr Lesson 03

December 13, 2018 0
Fiverr Profile ஐ வடிவமைப்பது எப்படி? | Fiverr Lesson 03

Fiverr Profile ஐ வடிவமைப்பது எப்படி?


Fiverr புதிய பதிப்பு வௌிவந்துவிட்டது, அதனால் உங்கள் Fiverr Profile ஐ வடிவமைப்பது அவ்வளவு கஷ்டமான காரியம் அல்ல. இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயம் பற்றி கூற வேண்டும். ஆரம்பகாலங்கலில் Fiverr கணக்கு ஆரம்பித்தவர்கள் அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் உருவாக்கும் Fiverr Profile போன்று உருவாக்கினர். காரணம் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைவிட அவ்வாறான வளர்ந்த நாடுகளின் கணக்குகளை போன்று உருவாக்கினால் விற்பனைகள் அதிகமாக கிடைக்கும் என்று நம்பினர். உண்மை என்னவென்றால் அவ்வாறு கணக்குகளை உருவாக்குவதால் விற்பனைகள் சற்று அதிகமாகத்தான் இருக்கும், நம் நாட்டு கணக்குகளை விட அவ்வாறான நாட்டு கணக்குகளுக்கு வரவேற்பு அதிகம்தான். எனினும் புதிய பதிப்பில் நீங்கள் அவ்வாறான விடயங்களை செய்ய வேண்டாம். காரணம் நீங்கள் I.P Address ஐ மாற்றி கணக்குகளை உருவாக்கினால் புதிதாக வௌிவந்துள்ள புதிய பதிப்பிற்கு நன்றாக புலப்பட்டுவிடும். அவர்களின் நம்பிக்கையை வீணடித்தால் Fiverr மூலம் கிடைக்கும் பல சலுகைகள் கிடைக்காமலே போய்விடலாம். Fiverr ற்கு உண்மையான மற்றும் நேர்மையான பயனர்களே தேவைப்படுகின்றார்கள். உங்களின் உண்மையான விடயங்களை மாத்திரம் இட்டு கணக்குகளை ஆரம்பியுங்கள். விற்பனை ஆகாது என்று கூறுவதெல்லாம் முட்டாள்தனம், உண்மை என்னவெனில் அவ்வாறு கூறுபவர்கள் வெறும் கணக்கினை மாத்திரம் ஆரம்பித்துவிட்டு Fiverr பக்கமே எட்டிகூட பார்க்கமாட்டார்கள். அப்படியிருந்தால் (சும்மாயிருந்தால்) எப்படி விற்பனைகள் நடக்கும்?? ஆகவே உங்கள் சொந்த விடயங்களை இட்டு கணக்குகளை ஆரம்பியுங்கள்.


சரி, அதிகமாக பேச விரும்பவில்லை. நேராக விடயத்திற்கு வருவோம்.. முதலில் Fiverr தளத்திற்குள் சென்றுவிடுங்கள். அங்கு வலதுபுறத்தில் மேல் மூலையில் Join என்ற பொத்தான் இருக்கும் அதனை அழுத்துங்கள். (உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்)


அதன் பின்னர் ஒரு Popup தோன்றும் (கீழ்காட்டப்பட்டுள்ளவாறு) அதில் உங்கள் ஈமெயில் முகவரியை இட்டு Continue பொத்தானை அழுத்துங்கள். 



நீங்கள் இவ்வாறு செய்யும் கணினியில் ஏற்கனவே உங்கள் ஜீ-மெயில் கணக்கிற்குள் நுழைந்திருந்தாலோ அல்லது பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்திருந்தாலோ.. ஈமெயில் முகவரியை அழுத்தும் இடத்திற்கு மேலாக உள்ள Continue With Facebook  அல்லது Continue with Google என்பதை பாவிக்கலாம். அதன் பின்னர் கீழ்காட்டப்பட்டுள்ளவாறு அடுத்த பக்கம் காட்டப்படும்..


இங்கு இலக்கம் 03 இடப்பட்டுள்ள இடத்தில் உங்கள் பயனர் பெயரையும் (User Name) இலக்கம் 04 குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உங்கள் இரகசிய கடவுச்சொல்லையும் இடுங்கள். முக்கியமானதொரு விடயம் என்னவெனில் User Name ஒரு தடவைதான் இட முடியும். இந்த படிமுறையை தாண்டி சென்றுவிட்டால் இனி எப்பொழுதும் அதனை மாற்றியமைக்க முடியாது.. ஆகையால் நீங்கள் வழங்கவிருக்கும் சேவைக்கு தொடர்புடையதாக உங்கள் User Name இருப்பது நல்லது. உதாரணத்திற்கு உங்கள் சேவை Logo Designing  என்றால் Killer_Design போன்ற பெயர் உங்கள் வளர்ச்சிக்கு உதவும். SEO அடிப்படையிலும் உங்கள் சேவை தேடப்படும் பொழுது உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். ஆகையால் அவ்வாறானதொரு பெயரை இட்டு Join பொத்தானை அழுத்துங்கள். 



இலக்கம் 05 ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு ஒரு செய்தி காண்பிக்கப்படும். அதில் உங்கள் ஈ-மெயில் முகவரியை உறுதி செய்யக்கூறி சொல்லப்பட்டிருக்கும். அதனால் நீங்கள் கணக்கை ஆரம்பிக்க வழங்கிய ஈ-மெயில் முகவரிக்குள் சென்று பார்த்தால் கீழ்காட்டப்பட்டுள்ளவாறு ஒரு ஈ-மெயில் வந்திருக்கும். அதில் இலக்கம் 07 ல் சுட்டிக்காட்டியுள்ள Activate Your Account என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கணக்கை Activate செய்துகொள்ளுங்கள்.  இலக்கம் 06 ல் நான் சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் My Profile என்பதற்குள் சென்றால் உங்கள் Profile ல் நிறைய விடயங்களை உட்செலுத்த கேற்கும். 


இலக்கம் 08 ல் குறிப்படப்பட்டுள்ள இடத்தில் உங்கள் படத்தை பதிவேற்ற வேண்டும். ஆனால் நீங்கள் வழங்கும் சேவைக்கு ஏற்றாற்போல் ஒரு படத்தை பதிவேற்றினாலும் அது உங்களுக்கு பயனளிக்க கூடும்.. ஏனெனில் நாம் User Name ற்கு நாம் வழங்கும் சேவைக்கு சம்பந்தமானதொரு பெயரைதான் வழங்கியிருப்போம்.. ஆகவே அவ்வாற பெயரை User Name ஆக வைத்துக்கொண்டு படத்திற்கு நம் படத்தை பதிவேற்றினால் பொருத்தமாக இருக்காது. அதே நீங்கள் User Name ற்கு உங்கள் பெயரை இட்டிருந்தால் இவ்விடத்தில் உங்கள் படத்தையே பதிவேற்றுங்கள். அதன் பின்னர் இலக்கம் 09 காட்டப்பட்டுள்ள இடத்தில் உங்கள் Story Line எழுத வேண்டும். ஒவ்வொரு வியாபாரத்திற்கும் இவ்வாறு ஒரு Story Line இருக்கும். அது அவ்வியாபாரத்தின் மேல் ஒரு மதிப்பையும் மரியாதையையும் வரவழைக்கும். அவ்வாறே இவ்விடத்தில் Story Line ஒன்றை எழுதுங்கள். 10 குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் கண்டிப்பாக உங்களை Freelancer என்றே தெரிவு செய்யுங்கள், அப்பொழுதுதான் Fiverr உங்களுக்கு அடிக்கடி கற்பித்துகொண்டே இருக்கும். நீங்கள் புதியவர், ஆகையால் அதுவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். இலக்கம் 11 காட்டப்பட்டிருக்கும் இடத்தில் உங்களுக்கு வரும் செய்திகளை பார்வையிடலாம். 12 ஆவது இடத்தில் நீங்கள் Fiverr  பாவிக்கும் பொழுது சேமித்து வைத்தவை எல்லாம் பார்வையிடலாம். 13 காட்டப்பட்டுள்ள இடத்தில்தான் உங்களுக்கு Orders வந்தால் பார்வையிட முடியும். 

Wednesday, December 12, 2018

இலட்சங்கள் தரும் Fiverr Gig ஒன்றை உருவாக்குவது எப்படி? | Fiverr Lesson 02

December 12, 2018 0
இலட்சங்கள் தரும் Fiverr Gig ஒன்றை உருவாக்குவது எப்படி? | Fiverr Lesson 02

முந்தைய பதிவில் எப்படி சரியான Gig ஐ தெரிவு செய்வது என்பதை பற்றி கூறியிருந்தேன். அப்பதிவை வாசிக்கவில்லை என்றால் தயவு செய்து அப்பதிவை வாசித்துவிட்டு இப்பதிவை வாசிக்கவும், ஏனெனில் சரியான Gig ஐ தெரிவு செய்யாவிடின் இப்பதிவு உங்களுக்கு வெற்றியளிக்க எந்தவித வாய்ப்பும் இல்லை. 

சரி நண்பர்களே! சரியான Gig ஐ தெரிவு செய்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அடுத்தது என்ன? Gig ஐ உருவாக்குவதுதான். Gig ஐ உருவாக்குவது சுலபமான காரியம்தான். ஆனால் Gig ஐ அதிக விற்பனைகள் ஆகுமாறு உருவாக்குவதுதான் Challenge. 

சற்று சிந்தியுங்கள்.. 10 - 20 நிமிடங்களில் உங்கள் Gig ஐ உருவாக்கிவிடலாம். அதற்கு 1 அல்லது 2 விற்பனைகளும் நடைபெறலாம். ஆனால் அது எந்தநாளும் விற்பனைகளை தரும் Gig ஆக அமையாது. அதனால் Gig ஐ உருவாக்க 1-2 நாட்களை நீங்கள் எடுத்துகொண்டாலும் பரவாயில்லை. ஏனெனில் தூரநோக்கு அவசியம்.. 10-20 நிமிடங்களில் Gig ஐ உருவாக்கி 10 விற்பனைகளுடன் நின்றுவிடாமல் 1-2 நாட்களையேனும் எடுத்துகொண்டு நிதானமாக Gig ஐ உருவாக்கிகொள்ளுங்கள்.. அது பிற்காலத்தில் 1000000$ கூட சம்பாதித்து தரலாம்.

சிறந்த Gig ஐ உருவாக்கும் பொழுது கவனத்தில் கொள்ளவேண்டிய சில விடயங்கள்



  • DEMAND - நாம் முந்தைய பதிவில் கலந்துரையாடிய விடயங்கள் இதனுள் அடங்கும். எப்படி கேள்வி உள்ள Gig ஐ தெரிவு செய்வது என்பதை பற்றி ஆராய்ந்தோம். அதனால் அதைப்பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை.

  • PROFESSIONALISM  - Fiverr ல் எந்த வேலை செய்தாலும் இது மிக முக்கியம். நீங்கள் செய்யப்போகும் வேலையை பற்றி முழுதாக தெரிந்திருப்பது நல்லது. நீங்கள் அவ்வேலையை செய்ய சிறந்தவர் என்பதை Buyer ற்கு காண்பிக்க வேண்டும். 

  • ATTRACTIVENESS - கவர்ச்சி என்பது மிக முக்கியம். ஏனெனில் பல்லாயிரக்கணக்கான Gig களில் நம் Gig ஐ தெரிவு செய்து Buyer வேலையை வழங்க வேண்டும் என்றால் நிச்சயம் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். அழகாக Images/ Videos பாவித்து இதனை கவர்ச்சிகரமாக உருவாக்கிவிடலாம்.

சாதாரணமாக Gig ஒன்றை உருவாக்குபவர்கள் யாருடையாவது Gig ஒன்றை பார்த்து அதைபோல Image கூகிலில் தறவிறக்கி அதை இங்கு பதிவேற்றி, சிறிதாக ஒரு Description ஐ எழுதி Publish செய்வார்கள். அவ்வாறு உருவாக்கப்படும்  Gig ல் குறைபாடுகள் அதிகமாக காணப்படும். 

சரி, குறைபாடுகள் இல்லாமல் Gig ஒன்றை உருவாக்குவது எப்படி என்றால், கீழ்வரும் காரணிகளை கருத்தில்கொண்டால் மட்டுமே அது முடியும். 

01. GIG TITLE


இதுதான் Gig ஒன்றில் முக்கியமான விடயம். தலைப்பு தௌிவாகவும் அர்த்தபூர்வமாகவும், கவர்சிகரமாகவும் இல்லையென்றால் Buyer அந்த Gig பற்றி சிந்தித்துகூட பார்க்மாட்டார். கொஞ்சம் சிந்தியுங்கள் First Impression is Best Impression என்று கூறுவார்கள். Gig ஒன்றில் முதலில் தெரிவது இந்த தலைப்புதான், ஆகவே தலைப்பை இடும் பொழுது சற்று சிந்தித்து தௌிவாக இடுங்கள். 


தலைப்பை எழுதும் பொழுது நீங்கள் ஒரு Buyer என்ற ரீதியில் சிந்தியுங்கள். அப்பொழுதுதான் அது மிகச்சரியாக அமையும். தலைப்பில் நீங்கள் என்ன விற்பனை செய்கிறீர்கள் என Buyer ற்கு தௌிவாக புரியவேண்டும், அதனால் சரியாக என்ன விற்பனை செய்யபோகின்றீர்கள் என தௌிவாக சொல்லுங்கள். என்னுடைய Fiverr ஆரம்ப காலங்களில் பெரும்பாலானோர் தலைப்பை நீளமாக எழுதினார்கள், ஆனால் அப்படி செய்ய வேண்டாம்.. தலைப்பு குறுகியதாகவும் அர்தபூர்வமாகவும் இருக்க வேண்டும். 

உதாரணம்  "I will write 500 word Highly TARGETED Search Optimized Article From 5$"

உங்களுக்கு இதில் ஒரு ஐடியா வந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த தலைப்பில் வெறும் Article ஒன்றை விற்பனை செய்வதை மட்டும் கூறாமல் அந்த Article மூலம் Highly Targeted SEO கிடைக்கும் என்பதை தௌிவாக கூறப்பட்டுள்ளது. இதை Buyer பார்த்தால் நிச்சயம் அவர் மனதில் ஒரு Motivation உருவாகும். அதனால் Gig ஐ கிலிக் செய்து உள்ளே வருவார்.

இதே போன்று நீங்கள் தெரிவு செய்த Gig  ஐடியாக்கள் அனைத்திற்கும் 05 தலைப்புகள் வீதம் எழுதிக்கொள்ளுங்கள். ஒரு தலைப்பு மட்டும் எழுதும் பொழுது அது சிறந்ததாக அமையாதவிடத்து 05 எழுதினால் அதில் ஒன்றேனும் சிறந்ததாக அமையும்.


02. GIG IMAGES


இதுவும் தலைப்பை போன்றே மிக முக்கியமானதொரு விடயம், காரணம் வார்த்தைகளால் விபரிக்க முடியாத பலவற்றை படங்கள் மூலம் விபரித்துவிடலாம். நாம் எந்த அளவிற்கு Professional என்று காண்பிக்க இதுதான் சிறந்த வழி. பெரும்பாலானோர் இதனை பிழையாக பயன்படுக்கின்றார்கள். கூகிலில் தேடி தறவிறக்கப்பட்ட படங்களை இங்கு பதிவேற்றுகிறார்கள். அவ்வாறு செய்ய முற்படாதீர்கள் ஏனெனில் நீங்கள் ஒரு படத்தை பதிவேற்றும் பொழுதே Fiverr ற்கு தெரியும் அது பதிவிறக்கப்பட்டதா? அல்லது நாமாகவே எடிட் செய்து பதிவேற்றியதா என்று. இவ்வாறு செய்வதனால் Fiverr ன் நம்பகத்தன்மையும் இழக்கப்படுகின்றது. Fiverr Featured போன்ற உதவிகள் Fiverr ல் பெற்றுக்கொள்ள இவ்வாறு பிழைகளை செய்யாமல் இருப்பதே சாலச்சிறந்தது.

682px * 459px இது Gig படங்களில் சரியான அளவாகும். இந்த அளவில் படங்களை எடிட் செய்து பதிவேற்றுங்கள். அத்துடன், “Exclusively on Fiverr.com” என்ற வார்த்தையை அப்படத்தில் எங்காவது தெரியும்படி இடுங்கள். காரணம் இதுவும் Fiverr ன் நம்பகத்தன்மையை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

எடிட் செய்யும் பொழுது முடிந்தளவு அழகாக எடிட் செய்யுங்கள். 03 படங்களை நீங்கள் ஆரம்பத்தில் பதிவேற்றலாம், போக போக அதிகமாக படங்களை பதிவேற்ற இடம் கிடைக்கும். 03 படங்களும் ஒரே படமாக இருத்தலாகாது. அதனால் 03 படங்கள் எடிட் செய்யுங்கள், அத்துடன் இம்மூன்று படங்களிலும் நீங்கள் வழங்கும் சேவை தொடர்பாக முழுமையாக குறிப்பிடப்படல் வேண்டும். வழங்கும் சேவை + ஏனைய Gig களைவிட அதிகமாக நீங்கள் வழங்கும் Feature என்னவென்றும் குறிப்பிட மறந்துவிடாதீர்கள். படத்தில் முக்கியமானவற்றை Highlight செய்யுங்கள்.

நீங்கள் ஏன் இந்த Gig ஐ விலை கொடுத்து வாங்க வேண்டும்? வாங்கினால் என்ன கிடைக்கும்? யாருக்கு இந்த சேவை பொருந்தும்? என்பவற்றை மனதில் வைத்து படத்தை உருவாக்கினால் அது சிறந்ததாக அமையும்.

நான் முழுமையாகவே, என் படங்களை போட்டோஷாப் உதவியுடன் உருவாக்கியுள்ளேன். சிலவேலைகளில் போட்டோஷாப் பற்றி உங்களுக்கு எந்த அறிவும் இருக்காது. ஆனால் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இணையம் இருக்கும் வரை யாரும் உங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை. அனைத்தையும் இணையம் வாயிலாக கற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் தெரிவு செய்த Gig அனைத்திற்கும் ஒன்றிற்கு 03 படங்கள் வீதம் 20*03 = 60 படங்களை எடிட் செய்துகொள்ளுங்கள். உங்களால் முடியவில்லை என்றால் தெரிந்தவர்கள் உதவியை நாடலாம்.

03. GIG VIDEO


தலைப்பு, படங்கள் போலவே Buyer ஐ நம்வசம் ஈர்க்க இதும் சிறந்த வழிதான்.  Fiverr Gig ற்கு வீடியோ ஒன்று பதிவேற்றக்கூடிய வசதியினை Fiverr அறிமுகப்படுத்தியதில் இருந்து இன்றுவரை கண்டிப்பாக வீடியோ ஒன்றை உருவாக்கி பதிவேற்றுமாறு பரிந்துரை செய்கின்றனர். காரணம், உண்மையில் வீடியோ ஒன்றின் மூலம் விற்பனையை 70% அதிகரித்துகொள்ள முடியும். ஆனால் ஆரம்பத்தில் நான் வீடியோ போடவில்லை.. ஆனால் பிறகு வீடியோ ஒன்றையும் பதிவேற்றினேன்.

உண்மையில் வீடியோ என்றதுமே நீங்கள் கமரா முன்பு தோன்றி உங்கள் சேவையை பற்றி கூற வேண்டுமென்றே அவசியமில்லை. ஆனால் அவ்வாறு செய்தால் மேலும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். வீடியோவில் உங்கள் குரலாவது இருந்தாலும் கொஞ்சம் நல்லதுதான். ஆனால் தயவு செய்து ரோபோ போன்ற குரல் இட்டு வீடியோ உருவாக்க வேண்டாம்.. அவற்றை Fiverr ஏற்றுக்கொள்வதில்லை. Gig பற்றி சரளமாக கூறி ஒரு வீடியோ உருவாக்குங்கள்... படங்கள் உருவாக்கும் பொழுது நாம் செய்தபடியே “Exclusively on Fiverr.com” / "Fiverr Logo" என்பவற்றை அவற்றில் இடுங்கள். அழகான பின்னிசை ஒன்றை இடுங்கள்.. நீங்கள் கதைக்கும் வீடியோ என்றால் மெல்ல கேட்குமாறு அதனை பயன்படுத்துங்கள். Gig Exra இருந்தால் அதனையும் வீடியோவில் குறிப்பிட மறந்துவிடாதீர்கள். 



03. GIG DESCRIPTION 



Buyer எப்பொழுதும் தலைப்பை பார்த்துவிட்டு அடுத்து பார்ப்பது இந்த Description ஐ தான். அதனால் இவ்விடத்தில் உங்கள் சேவையை பற்றி சரியாக குறிப்பிடவில்லை என்றால் அந்த விற்பனை தடைபட்டு செல்ல வாய்ப்புண்டு. அதனால் பின்வருமாறு ஒரு வடிவத்தில் அதனை எழுதுங்கள். 

========================================================================
நீங்கள் வழங்கும் சேவையில் பெறுமதி (பணத்தில் அளவு அல்ல, Buyer ற்கு அது எவ்வளவு பெறுமதி)
========================================================================
  இவ்விடத்தில் நீங்கள் வழங்கும் சேவையை விபரித்து எழுத வேண்டும், Gig Exras பற்றியும் Features பற்றியும் எழுத மறந்துவிடாதீர்கள். 
========================================================================
இவ்விடத்தில் Buyer ஏன் நம் சேவையை பணம் கொடுத்து வாங்க வேண்டும்? இதுவரை செய்துமுடித்துள்ள Projects, Fiverr Levels, Experience, Reviews மற்றும் Buyer நமக்கு Project ஐ வழங்கினால் அதனை ஆரம்பிக்க தேவையான விடயங்கள்
========================================================================


04. GIG TAGS



டெக்ஸ் எழுதும் பொழுது நாம் பின்பற்ற வேண்டிய விடயங்கள் என்னவெனில் ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் பாவிக்காமல் எழுதவேண்டும். அவ்வாறு இல்லையெனில் Fiverr அதனை நிராகரித்துவிடும். அதனை தவிர டெக்ஸ் இட தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கின்றேன். காரணம் SEO பற்றி நாம் பேசும் பொழுது இந்த டெக்‌ஸ் அதில் அதிகளவாக பேசப்படும். இப்போதைக்கு நீங்கள் வழங்கப்போகும் சேவைக்கு அமைவாக தெரிந்தளவில் டெக்‌ஸ் வழங்குங்கள். SEO பற்றி பேசும் பதிவில் அவற்றை தௌிவாக பார்க்கலாம். 



முறையாக Fiverr கணக்கொன்றை ஆரம்பிப்பது எப்படி | Fiverr Lesson 01

December 12, 2018 0
முறையாக Fiverr  கணக்கொன்றை ஆரம்பிப்பது எப்படி  | Fiverr Lesson 01

முறையாக Fiverr  கணக்கொன்றை ஆரம்பிப்பது எப்படி

Fiverr ல் நாம் நம் வேலைகளை தொடங்க முன்னர் Fiverr பாவனைாளர்கள் அனுதினம் பாவிக்கும் சில வார்த்தைகளை இங்கு விளக்கிவிட்டால் நல்லது என்று நினைக்கின்றேன். அப்படி செய்தால் நீங்கள் Fiverr ல் உங்கள் வியாபாரத்தை ஆரம்பித்து நடாத்தி செல்வதில் எந்தவொரு சிக்கலும் வராது. 




  • Buyer - இவர்தான் உங்களிடம் உங்கள் சேவை/பொருளை பணம் கொடுத்து வாங்குபவர், இவர்  Fiverr ல் இலகுவாக பணத்தை செலுத்த முடியும் அத்துடன் வேலையை செய்துமுடித்ததும் பணத்தை செலுத்தாமல் இருக்க இவரால் முடியாது ஏனெனில் பணம் செலுத்திய பின்னர்தான் வேலையை நாம் செய்யப்போகின்றோம்..
  • Seller - இதுதான் நாங்கள். அதாவது  Fiverr ல் கணக்கு வைத்திருப்பவர்கள்.. நாம் நமது பொருள்/சேவையை விற்பனை செய்வதால்தான் இவ்வாறு அழைக்கப்படுகின்றோம்.. நீங்கள் விற்கும் ஒவ்வொரு பொருளுக்கும் / சேவைக்கும் ஆக குறைந்தது 5$ கிடைக்கும், அதில் 1$ ஐ  Fiverr வழங்கும் சேவைக்காக எடுத்துக்கொள்ளும். 
  • Gig - நீங்கள் விற்கும் பொருள் / சேவைக்குதான் Gig என்று பெயர் வைக்கப்படுள்ளது. ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட Gig களை விற்க முடியும் (20 வரை). 
  • Featured Gig - இங்கு அதிகமாக விற்பனையாகும் அல்லது அதிகமாக விற்பனையாக வாய்ப்புள்ள  Gig மீது Fiverr அக்கரை எடுத்துக்கொள்ளும். அதனால் அதை Featured Gig ஆக மாற்றும்.. அதற்காக Featured BADGE ஒன்றும் வழங்கப்படும். அப்படி செய்தால் உங்கள் Gig பைவரில் முதல் பக்கத்தில் காண்பிக்கப்படும். (Fiverr ல் பல்லாயிரக்கணக்கான Gig உள்ளது, அதனுள் போட்டியிட்டு Orders பெற்றுக்கொள்ள இது உதவும்)
  • Request Gig - இது Fiverr ல் வலதுபுறம் இருக்கும் ஒரு சேவையாகும்.. இதனால் பல தண்டணைகளுக்கும் நான் ஆளாகியுள்ளேன். இதில் Buyer களுக்கு தேவையான சேவையை வழங்கும் சிறந்த Gig களை தேடிக்கொள்ள உதவும். இதில் Buyer ஒருவரை பரிந்துரை செய்வார். ஆனால் இதில் நீங்கள் உங்கள் Gig பற்றி எழுத முற்பட வேண்டாம்.. ஏனெனில் Buyer களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்பட்டுள்ளது.. தவறி நீங்கள் அதை தவறாக பயன்படுத்தினால் எந்தவித முன்னறிவித்தலுமின்றி உங்கள் கணக்கு துண்டிக்கப்படும் (இதுதான் நான் ஆரம்பத்தில் கூறிய தண்டணை)
  • Fiverr Levels - நாம் Fiverr ல் வேலை செய்வதை மேலும் சுவாரஸ்யம் ஆக மாற்ற Fiverr Levels வழங்கப்படுகின்றது. பிரதானமாக 04 Fiverr Levels உள்ளன. Level 01, Level 02, Top Rated Seller, Fiverr Super Seller என்பவை அவையாகும். 
  • Gig Extras - நாம் Fiverr ல் மேற்கூறிய Levels களை அடையும் பொழுது கிடைக்கும் ஒரு வசதிதான் Gig Extras.. இதன் மூலம் நீங்கள் வழங்கும் சேவைக்கு 5$ ஐ அதிகரித்துகொள்ள முடியும். 10$, 20$, 40$ என 100$ என்றாலும் விலை வைத்துக்கொள்ள முடியும். 

This Gig, That Service, What Product? 

Fiverr ல் இதுதான் உங்கள் முதல் படிமுறையாகும். இதில் நீங்கள் எந்த பொருளை / சேவையை விற்பனை செய்யப்போகின்றீர்கள் என்பதை தெரிவு செய்ய வேண்டும். இதுதான் உங்கள் Fiverr வியாபாரத்தின் தலையெழுத்தை தீர்மானிக்க போகின்றது. பிழையாக தெரிவு செய்தால் நீங்கள் Fiverr ல் வெற்றிகாண முடியாது. இதுதான் பெரிய Challenge ஆக அமையப்பபோகின்றது. 

"சிறந்த தூரநோக்குடன் கடின உழைப்பும் உங்களிடன் இருந்தால் இது பாரிய பிரச்சினையாக உங்களுக்கு அமையாது"

ஆகையால் பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளவும். 

நாம் Fiverr ல் இப்பொழுது பகுதி நேர வேலையாக ஆரம்பித்தாலும் பிற்காலத்தில் அதுவே உங்கள் முழுநேர வேலையாக மாறிவிடும் (வருவாய் அதிகரிக்க அதிகரிக்க) அதனால் நீங்கள் தெரிவு செய்யும் Category உங்களுக்கு பிடித்த விடையமாகவும் வாழ்நாள் முழும் அதையே செய்யும் பொழுது அழுத்து போகாமலும் இருக்க வேண்டும். நமக்கு மிகவும் பிடித்த வேலையையே தொடர்ந்து செய்வோமெனில் இறுதிவரை சந்தோஷமாக இருக்கலாம். 


Fiverr ல் வழங்கப்படும் சேவைகளில் பிரதானமாக 12 பிரிவுகள் உள்ளன. 119 உப பிரிவுகள் உள்ளன. அவை பின்வருமாறு..

  • GIFTS

  1. Greeting Cards.
  2. Video Greetings.
  3. Unusual Gifts.
  4. Arts & Crafts.
  5. Handmade Jewelry.
  6. Gifts for Geeks.
  7. Postcards From..
  8. Recycled Formats.
  9. Other.

  • GRAPHIC & DESIGN

  1. Cartoons & Caricatures.
  2. Logo Design.
  3. Illustration.
  4. eBook Covers & Packages.
  5. Web Design & UI.
  6. Photography & Photoshopping.
  7. Presentation Design.
  8. Flyers & Brochures.
  9. Business Cards.
  10. Banners & Headers.
  11. Architecture.
  12. Landing Pages.
  13. Other.

  • VIDEO & ANIMATION

  1. Commercials.
  2. Editing & Post Production.
  3. Animation & 3D.
  4. Testimonials & Reviews by Actors.
  5. Puppets.
  6. Stop Motion.
  7. Intros.
  8. Other.

  • DIGITAL MARKETING

  1. Web Analytics.
  2. Article & PR Submission.
  3. Blog Mentions.
  4. Domain Researches.
  5. Fan Pages.
  6. Keywords Research.
  7. SEO.
  8. Bookmarking & Links.
  9. Social Marketing.
  10. Get Traffic.
  11. Video Marketing.
  12. Other.

  • WRITING & TRANSLATION 

  1. Copywriting.
  2. SEO Keyword Optimization.
  3. Creative Writing & Scripting.
  4. Translations.
  5. Transcripts.
  6. Website Content.
  7. Reviews.
  8. Resumes & Cover Letters.
  9. Speech Writing.
  10. Proofreading & Editing.
  11. Press Releases.
  12. Other.

  • ADVERTISING 

  1. Hold Your Sign.
  2. Flyers & Handouts.
  3. Human Billboards.
  4. Pet Models.
  5. Outdoor Advertising.
  6. Radio.
  7. Music Promotion.
  8. Banner Advertising.
  9. Other.

  • BUSINESS 

  1. Business Plans.
  2. Career Advice.
  3. Market Research.
  4. Presentations.
  5. Virtual Assistant.
  6. Business Tips.
  7. Branding Services.
  8. Financial Consulting.
  9. Legal Consulting.
  10. Other.

  • PROGRAMMING & TECH

  1. .NET.
  2. C++.
  3. CSS & HTML.
  4. Joomla & Drupal.
  5. Databases.
  6. Java.
  7. Javascript.
  8. PSD to HTML.
  9. WordPress.
  10. iOS, Android & Mobile.
  11. PHP.
  12. QA & Software Testing.
  13. Technology.
  14. Other.

  • MUSIC & AUDIO

  1. Audio Editing & Mastering.
  2. Jingle.
  3. SongWriting.
  4. Music Lessons.
  5. Rap Music.
  6. Hip-Pop Music.
  7. Narration & Voice-Over.
  8. Sound Effects & Loops.
  9. Custom Ringtones.
  10. Voicemail Greetings.
  11. Custom Songs.
  12. Other.

  • FUN & BIZARRE

  1. Your Message On..
  2. Extremely Bizarre.
  3. Celebrity Impersonators.
  4. Daredevils & Stunts.
  5. Pranks.
  6. Dancers.
  7. Just For Fun.
  8. Other.

  • LIFESTYLE

  1. Animal Care & Pets.
  2. Relationship Advice.
  3. Diet & Weight Loss.
  4. Health & Fitness.
  5. Makeup, Styling & Beauty.
  6. Online Private Lessons.
  7. Astrology & Fortune Telling.
  8. Spiritual & Healing.
  9. Cooking Recipes.
  10. Parenting Tips.
  11. Travel.
  12. Other.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் நீங்கள் திறமை வாய்ந்தவர்தான் என்பதை மட்டும் என்னால் 200% உறுதியாக கூற முடியும். சிலவேலைகளில் அவற்றை நன்கு கவனித்தாலும் "என்னால் இதில் எதையுமே செய்ய முடியாதே!" என்ற நிலையில் நீங்கள் இருக்கலாம். அவ்வாறு இருப்பின்


  1. மேற்கூறிப்பிடப்பட்டவற்றில் உங்களுக்கு நன்கு தெரிந்த மற்றும் நீங்கள் ஆசையுடன் விரும்பி செய்யக்கூடிய வேலைகள் 20ஐ முதலில் ஒரு தாளில் எழுதிக்கொள்ளுங்கள்.
  2. இப்பொழுது நீங்கள் எழுதிய 20 வேலைகளில் ஒன்றை தெரிவு செய்து அதில்  5$ ற்கு செய்யக்கூடியவாறான சேவைகளை எழுதிக்கொள்ளுங்கள். உதாரணமாக Online Marketing ல் Fanpage என்பதை தெரிவு செய்தால் 
I will design a Professional Timeline Cover For 5$
I will Create Business Fan Page for 5$
I will design a custom opt-in page in your facebook page for 5$
etc

சரி, இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இவ்வாறு 20 வகைகளுக்கும் ஒன்றுக்கு 10 வீதம் எழுதினாலும் 200 Gig Ideas கிடைத்திருக்கும். சரி, இப்பொழுது இவை அனைத்தையும் செய்ய முடியாது.. அதனால் நாம் அதில் சரியானவற்றை Filter செய்ய வேண்டும். அதனை செய்ய  Fiverr's Trems of Service & Fiverr's Privacy Policy இரண்டையும் வாசித்துவிட்டு அதற்கு புறம்பாக உள்ள சேவைகளை அகற்றிவிடுங்கள். இவை ஆங்கிலத்தில் உள்ளன.. தமிழில் வேண்டும் என்றால் கீழே கமெண்ட் செய்யவும். கண்டிப்பாக இதனை வாசிக்க வேண்டும் இல்லையென்றால் பிற்காலத்தில் நாம் பல தவறுகளை விட வாய்ப்புகள் அதிகம்.

அதன் பின்னர் மிகுதியாக உள்ள சேவைகளில் 10-20 நிமிடங்களில் செய்துமுடிக்ககூடிய வேலைகளை வைத்துவிட்டு அதிக நேரம் எடுக்கும் வேலைகளை அகற்றிவிடுங்கள். ஏன் என்றால் 5$ இற்காக 500$ ற்கான வேலைகளை செய்ய கூடாது. சிலர் ஒரு நாள் முழும் ஒரு வேலைக்காக பயன்படுத்தவும் துணிவார்கள், ஆனால் காலம் செல்ல செல்ல வேலைகள் அதிகமாக கிடைக்க ஆரம்பிக்கும் பொழுது அது கஷ்டமாகிவிடும். காலம் பொன்னானது என்ற கூற்றையும் நாங்கள் மறந்துவிடக்கூடாது.

 அத்துடன் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.. முதலில் ஆரம்பித்தஉடனே நான் கூறிய வெற்றியை தேட முயலாதிருங்கள். 2,3,4 Gig ற்கான வேலை என்றாலும் செய்துகொடுங்கள். ஏனெனில், நமது நோக்கம் ஆரம்பித்தஉடன் பணத்தில் இருக்க கூடாது.. விற்பனையாகும் அளவில்தான் இருக்க வேண்டும். காலம் செல்ல செல்ல அனைத்திற்கும் சேர்த்தாற்போல பணம் வந்து குவியும்.

அதிக கேள்வி இருக்கும் Category என்ன? சிலர் சொல்வார்கள், Graphic Design என்று, ஆம். Graphic Design ற்குதான் அதிக கேள்வி நிலவுகின்றது. ஆனால் அது மட்டுமே அதிக கேள்வி நிலவும் Category ஆக அமையாது.

இவ்விடத்தில், அதிக கேள்வி நிலவும் Category ல் நாம் சேவைகளை வழங்க கூடாது, மாறாக நாம் எழுதிய Category களில் அதிக கேள்வி நிலவும் Category ல் சேவைகளை வழங்க வேண்டும்... (புரியாவிடின் திரும்பி ஒருதடவை வாசிக்கவும்)

Writing & Translation, Web Designing & Developing, SEO, Social Media Marketing போன்ற Category களுக்குதான் அதிக கேள்விகள் தற்காலத்தில் நிலவுகின்றது. ஒருதடவை  Fiverr ல் சென்று பாருங்கள். நீங்கள் மற்றவர்களது Gig ஐ கவணிக்கும் பொழுது Order in Queue ல் உள்ள Order அளவை பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

சரி, இறுதியாக மிகுதியாக உள்ள Gig களைதான் நீங்கள் பாவிக்க போகின்றீர்கள். 

Freelancing அறிமுகம் | Freelancing Introduction in Tamil

December 12, 2018 0
Freelancing அறிமுகம் | Freelancing Introduction in Tamil



















இணையம் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது இனுயும் ஒரு இரகசியம் அல்ல. Freelancing என்பது சிறிய சிறிய Projects செய்து கொடுத்து அதற்கான
பெறுமதியை வருவாயாக நாம் பெறும் ஒரு முறையாகும். இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் பிரதான வழிகளில் இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் முன்னறிவு அற்றவர்களுக்கு இந்த Freelancing ஒரு சிறந்த ஆரம்பத்தை வழங்கும் என்பது என்னுடைய நம்பிக்கையாகும்.

சிலவேலைகளில் இதற்கு முன்பதாக நீங்கள் Fiverr பற்றி அறிந்தீராமல் இருக்கலாம்.. அப்படியாயில் கூகிலில் Fiverr பற்றி தேடிப்பார்த்தீர்களாயின் சிறியதொரு அறிவை பெறலாம். எனினும் இந்த பதிவுகளை தொடர்ந்து வாசிப்பீர்களாயின் அதைப்பற்றி முழுமையான அறிவினை நீங்கள் பெறலாம். 

Fiverr என்பதை சரளமாக விளக்கினால், 5$ ற்கு எந்தவொரு பொருள்/சேவையை விற்பனை செய்ய உதவும் ஒரு பாரிய Marketplace ஆகும். ஆனால் 5$ மட்டும் என்பது உங்கள் ஆரம்பமாக அமையுமே தவிர காலம் செல்ல செல்ல அனுபவம் நிறையும் பொழுது 10000$ வரையிலும் கூட ஒரு Project ற்கு பெற்றுக்கொள்ளலாம்.. இந்தியா மற்றும் இலங்கையிலும் கூட நம்மவர்கள் வாழ்க்கைக்கு தேவையான பிரதான வருமானத்தை இந்த Fiverr மூலம் பெற்றுகொள்கின்றார்கள். 


Fiverr என்பது ஒரு பாரிய Marketplace ஆகும். இதனுள் 5$ ற்கு வழங்கக்கூடிய சேவைகள் ஏராளம், உதாரணத்திற்கு நாம் ஒரு Shopping Complex ஒன்றிற்குள் சென்றால் அங்கு பலதரப்பட்ட பொருட்கள்/ சேவைகள் இருக்கும். நாம் உள்ளே செல்வது ஒரு திரைப்பட இறுவட்டை விலைகொடுத்து வாங்கவெனில் அதனை வாங்கிவிட்டு வௌியே வரும் பொழுது அத்திரைப்படத்தில் வரும் கதாநாயகனின் படம் அச்சிடப்பட்ட ஆடைகளை காண்கிறோமெனில் நாம் அதன்மீதும் ஆசைகொண்டு அதனையும் வாங்கிவிட்டு வீடு திரும்புவோம். அதே போன்று Fiverr ல் நாம் விற்பனை செய்யும் பொருள்/சேவைக்கு மேலதிகமாக அதனை தொடர்புடைய அல்லது அதனை போன்ற இன்னுமொரு பொருள்/சேவையினை விற்பனை செய்யலாம். ஆகையால் 5$ என்பது Fiverr ன் ஆரம்பமாக இருப்பினும் அதற்கும் மேலதிகமாக விற்பனைகளை செய்துகொள்வது எமது திறமையில்தான் இருக்கிறது.

"மனிதர்களில் தேவைகளையும் விருப்பங்களையும் அழகாக நேர்த்தியாக நிறைவேற்றும் பொழுது அதற்கு கேள்வி அதிகமாகின்றது"

01. ஏன் Fiverr?


Freelancer, Odesk போன்ற Freelancing இணையத்தளங்கள் ஏராளமாக இருப்பினும் நீங்கள் ஆரம்பிக்க Fiverr தான் சிறந்தது என நான் பரிந்துரை செய்ய பின்வரும் காரணங்கள்தான் என் மனதில் எழுகிறது.


  • 5$ என்பது 700 ரூபா (இலங்கையில்) ஆகும். ஆகவே 5$ ற்கு Risk எடுக்க எவரும் பின்னடைவதில்லை, ஏனெனில் ஏனைய தளங்களில் (Freelancer, Odesk போன்ற) 5$ ற்கு இல்லாமல் மிக அதிகமான விலைக்குதான் விற்பனைகள் நடக்கின்றது. 
  • 5$ற்கு கொள்வனவு செய்யும் நோக்குடன் வருகை தரும் வாடிக்கையாளரை நமக்கு தேவையேற்ப Brainwash செய்து மேலதிக விற்பனைகளை மேற்கொள்ள முடியும். 
  • கொஞ்சம் சிந்தியுங்கள், பெரிய பெரிய Projects களுக்கு Outsource செய்துகொள்ளத்தான் பெரும்பாலும் Fiverr ல் வாடிக்கையாளர்கள் உலாவுகின்றார்கள், அதனால்தான் அதிகமாக விற்பனைகள் நடக்கின்றது. 


சரி, Fiverr மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறிய உடனே தயவு செய்து Fiverr ல் கணக்குகளை திறந்துவிட வேண்டாம்.. முதலில் இந்த வலைப்புவில் பதிவிடப்பட்டுள்ள அனைத்து பதிவுகளையும் நன்கு வாசித்து படிப்படியாக செய்ய ஆரம்பியுங்கள்.. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் எனது Fiverr பயணம் அதற்கு சிற்த உதாரணமாக அமையும்.

நான் 2010 ஆகஸ்ட் மாதம்தான் Fiverr ல் கணக்கொன்றை ஆரம்பித்தேன்.. ஆனால் ஆரம்பிக்கும் பொழுது எந்தவொரு முன்னறிவும் இருக்கவில்லை.. இதே போன்ற ஒரு பதிவினை பார்த்துதான் ஆரம்பித்தேன்.. நான் இனை என் நண்பர்களுக்கு சொல்ல என் நண்பர்களும் இணைந்து மொத்தமாக 04 கணக்குகளை (நால்வரும்) ஆரம்பித்தோம்.. அழகாக GIG ஐ தயாரித்து Order வரும் வரும் என நம்பி காத்திருந்தோம்.. மாதங்கள் செல்ல செல்ல நண்பர்களுக்கு சற்று அளுத்து போய்விட்டது.. இதெல்லாம் பொய்யான முயற்சி, சற்றும் பயணில்லை என்று விட்டுவிட்டார்கள்.. ஆனால் நான் விடவில்லை..

தொடர்ந்து முயற்சி செய்தேன்.. ஒரு கட்டத்தில் எனக்கும் இதனை விட்டுவிடவேண்டிய நிலை வந்துவிட்டது.. நானும் விட்டுவிட்டேன்..

2018 ம் ஆனது.. கிட்டத்தட்ட 08 வருடங்களுக்கு பின்னராக நான் என் ஜீமெயில் ற்குள் நுழைந்த பொழுது ஆயிரக்கணக்கான ஈ-மெயில்கள் குவிந்து கிடந்தன.. அதில் அதிகமானவை Fiverr ஆல் அனுப்பப்பட்டது..

மீண்டும்.. தேட ஆசை வர தேட ஆரம்பித்தேன்.. Fiverr Ultimate Post Serious என்ற பதிவு தொடர் கிடைக்க முழுமையாக வாசித்தேன்... (ஆங்கிலத்தில் இருந்தது, எனக்கு ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்) முழுமையாக விளக்கம் தெரியாவிடினும் ஓரிரு வார்த்தைகள் புரிய ஆரம்பிக்க நான் Fiverr கணக்கை ஆரம்பித்தும் Order வராததற்கான காரணத்தை புரிந்துகொண்டேன். மீண்டும் புதிய கணக்கொன்றை ஆரம்பித்தேன்.,, தொடந்து முயற்சி செய்தேன்.. 03 நாட்களில் எனது முதல் Order வந்துசேர்ந்தது..

2010ல் அவ்வளவு முயற்சிகள் செய்தும் Order வராதது ஏன் என்றால் Fiverr பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை, ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும்தான் இருந்தது..

அதனால், இப்பதிவுகளை முழுமையாக இறுதிவரை வாசித்து படிப்படியாக உங்கள் Fiverr பயணத்தை தொடர்வீர்களாயின் அதுவே சாலச்சிறந்தது...!

01. சரியான GIG ஐ தெரிவு செய்தல்



02. இலட்சங்கள் தரும் Fiverr Gig ஒன்றை உருவாக்குவது எப்படி?




03. Fiverr Profile ஐ வடிவமைப்பது எப்படி? 




(​மேலும் பதிவுகள் தொடர்ச்சியாக வரக்காத்திருக்கின்றன)