Thursday, December 13, 2018

Fiverr Profile ஐ வடிவமைப்பது எப்படி? | Fiverr Lesson 03

Fiverr Profile ஐ வடிவமைப்பது எப்படி?


Fiverr புதிய பதிப்பு வௌிவந்துவிட்டது, அதனால் உங்கள் Fiverr Profile ஐ வடிவமைப்பது அவ்வளவு கஷ்டமான காரியம் அல்ல. இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயம் பற்றி கூற வேண்டும். ஆரம்பகாலங்கலில் Fiverr கணக்கு ஆரம்பித்தவர்கள் அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் உருவாக்கும் Fiverr Profile போன்று உருவாக்கினர். காரணம் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைவிட அவ்வாறான வளர்ந்த நாடுகளின் கணக்குகளை போன்று உருவாக்கினால் விற்பனைகள் அதிகமாக கிடைக்கும் என்று நம்பினர். உண்மை என்னவென்றால் அவ்வாறு கணக்குகளை உருவாக்குவதால் விற்பனைகள் சற்று அதிகமாகத்தான் இருக்கும், நம் நாட்டு கணக்குகளை விட அவ்வாறான நாட்டு கணக்குகளுக்கு வரவேற்பு அதிகம்தான். எனினும் புதிய பதிப்பில் நீங்கள் அவ்வாறான விடயங்களை செய்ய வேண்டாம். காரணம் நீங்கள் I.P Address ஐ மாற்றி கணக்குகளை உருவாக்கினால் புதிதாக வௌிவந்துள்ள புதிய பதிப்பிற்கு நன்றாக புலப்பட்டுவிடும். அவர்களின் நம்பிக்கையை வீணடித்தால் Fiverr மூலம் கிடைக்கும் பல சலுகைகள் கிடைக்காமலே போய்விடலாம். Fiverr ற்கு உண்மையான மற்றும் நேர்மையான பயனர்களே தேவைப்படுகின்றார்கள். உங்களின் உண்மையான விடயங்களை மாத்திரம் இட்டு கணக்குகளை ஆரம்பியுங்கள். விற்பனை ஆகாது என்று கூறுவதெல்லாம் முட்டாள்தனம், உண்மை என்னவெனில் அவ்வாறு கூறுபவர்கள் வெறும் கணக்கினை மாத்திரம் ஆரம்பித்துவிட்டு Fiverr பக்கமே எட்டிகூட பார்க்கமாட்டார்கள். அப்படியிருந்தால் (சும்மாயிருந்தால்) எப்படி விற்பனைகள் நடக்கும்?? ஆகவே உங்கள் சொந்த விடயங்களை இட்டு கணக்குகளை ஆரம்பியுங்கள்.


சரி, அதிகமாக பேச விரும்பவில்லை. நேராக விடயத்திற்கு வருவோம்.. முதலில் Fiverr தளத்திற்குள் சென்றுவிடுங்கள். அங்கு வலதுபுறத்தில் மேல் மூலையில் Join என்ற பொத்தான் இருக்கும் அதனை அழுத்துங்கள். (உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்)


அதன் பின்னர் ஒரு Popup தோன்றும் (கீழ்காட்டப்பட்டுள்ளவாறு) அதில் உங்கள் ஈமெயில் முகவரியை இட்டு Continue பொத்தானை அழுத்துங்கள். 



நீங்கள் இவ்வாறு செய்யும் கணினியில் ஏற்கனவே உங்கள் ஜீ-மெயில் கணக்கிற்குள் நுழைந்திருந்தாலோ அல்லது பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்திருந்தாலோ.. ஈமெயில் முகவரியை அழுத்தும் இடத்திற்கு மேலாக உள்ள Continue With Facebook  அல்லது Continue with Google என்பதை பாவிக்கலாம். அதன் பின்னர் கீழ்காட்டப்பட்டுள்ளவாறு அடுத்த பக்கம் காட்டப்படும்..


இங்கு இலக்கம் 03 இடப்பட்டுள்ள இடத்தில் உங்கள் பயனர் பெயரையும் (User Name) இலக்கம் 04 குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உங்கள் இரகசிய கடவுச்சொல்லையும் இடுங்கள். முக்கியமானதொரு விடயம் என்னவெனில் User Name ஒரு தடவைதான் இட முடியும். இந்த படிமுறையை தாண்டி சென்றுவிட்டால் இனி எப்பொழுதும் அதனை மாற்றியமைக்க முடியாது.. ஆகையால் நீங்கள் வழங்கவிருக்கும் சேவைக்கு தொடர்புடையதாக உங்கள் User Name இருப்பது நல்லது. உதாரணத்திற்கு உங்கள் சேவை Logo Designing  என்றால் Killer_Design போன்ற பெயர் உங்கள் வளர்ச்சிக்கு உதவும். SEO அடிப்படையிலும் உங்கள் சேவை தேடப்படும் பொழுது உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். ஆகையால் அவ்வாறானதொரு பெயரை இட்டு Join பொத்தானை அழுத்துங்கள். 



இலக்கம் 05 ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு ஒரு செய்தி காண்பிக்கப்படும். அதில் உங்கள் ஈ-மெயில் முகவரியை உறுதி செய்யக்கூறி சொல்லப்பட்டிருக்கும். அதனால் நீங்கள் கணக்கை ஆரம்பிக்க வழங்கிய ஈ-மெயில் முகவரிக்குள் சென்று பார்த்தால் கீழ்காட்டப்பட்டுள்ளவாறு ஒரு ஈ-மெயில் வந்திருக்கும். அதில் இலக்கம் 07 ல் சுட்டிக்காட்டியுள்ள Activate Your Account என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கணக்கை Activate செய்துகொள்ளுங்கள்.  இலக்கம் 06 ல் நான் சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் My Profile என்பதற்குள் சென்றால் உங்கள் Profile ல் நிறைய விடயங்களை உட்செலுத்த கேற்கும். 


இலக்கம் 08 ல் குறிப்படப்பட்டுள்ள இடத்தில் உங்கள் படத்தை பதிவேற்ற வேண்டும். ஆனால் நீங்கள் வழங்கும் சேவைக்கு ஏற்றாற்போல் ஒரு படத்தை பதிவேற்றினாலும் அது உங்களுக்கு பயனளிக்க கூடும்.. ஏனெனில் நாம் User Name ற்கு நாம் வழங்கும் சேவைக்கு சம்பந்தமானதொரு பெயரைதான் வழங்கியிருப்போம்.. ஆகவே அவ்வாற பெயரை User Name ஆக வைத்துக்கொண்டு படத்திற்கு நம் படத்தை பதிவேற்றினால் பொருத்தமாக இருக்காது. அதே நீங்கள் User Name ற்கு உங்கள் பெயரை இட்டிருந்தால் இவ்விடத்தில் உங்கள் படத்தையே பதிவேற்றுங்கள். அதன் பின்னர் இலக்கம் 09 காட்டப்பட்டுள்ள இடத்தில் உங்கள் Story Line எழுத வேண்டும். ஒவ்வொரு வியாபாரத்திற்கும் இவ்வாறு ஒரு Story Line இருக்கும். அது அவ்வியாபாரத்தின் மேல் ஒரு மதிப்பையும் மரியாதையையும் வரவழைக்கும். அவ்வாறே இவ்விடத்தில் Story Line ஒன்றை எழுதுங்கள். 10 குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் கண்டிப்பாக உங்களை Freelancer என்றே தெரிவு செய்யுங்கள், அப்பொழுதுதான் Fiverr உங்களுக்கு அடிக்கடி கற்பித்துகொண்டே இருக்கும். நீங்கள் புதியவர், ஆகையால் அதுவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். இலக்கம் 11 காட்டப்பட்டிருக்கும் இடத்தில் உங்களுக்கு வரும் செய்திகளை பார்வையிடலாம். 12 ஆவது இடத்தில் நீங்கள் Fiverr  பாவிக்கும் பொழுது சேமித்து வைத்தவை எல்லாம் பார்வையிடலாம். 13 காட்டப்பட்டுள்ள இடத்தில்தான் உங்களுக்கு Orders வந்தால் பார்வையிட முடியும். 

No comments:

Post a Comment

தயவு செய்து உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடவும்.. உங்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் / கேள்விகளை வைத்துதான் எமது பதிவுகள் தொடர்ந்து வர காத்திருக்கின்றன