Wednesday, December 12, 2018

இலட்சங்கள் தரும் Fiverr Gig ஒன்றை உருவாக்குவது எப்படி? | Fiverr Lesson 02


முந்தைய பதிவில் எப்படி சரியான Gig ஐ தெரிவு செய்வது என்பதை பற்றி கூறியிருந்தேன். அப்பதிவை வாசிக்கவில்லை என்றால் தயவு செய்து அப்பதிவை வாசித்துவிட்டு இப்பதிவை வாசிக்கவும், ஏனெனில் சரியான Gig ஐ தெரிவு செய்யாவிடின் இப்பதிவு உங்களுக்கு வெற்றியளிக்க எந்தவித வாய்ப்பும் இல்லை. 

சரி நண்பர்களே! சரியான Gig ஐ தெரிவு செய்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அடுத்தது என்ன? Gig ஐ உருவாக்குவதுதான். Gig ஐ உருவாக்குவது சுலபமான காரியம்தான். ஆனால் Gig ஐ அதிக விற்பனைகள் ஆகுமாறு உருவாக்குவதுதான் Challenge. 

சற்று சிந்தியுங்கள்.. 10 - 20 நிமிடங்களில் உங்கள் Gig ஐ உருவாக்கிவிடலாம். அதற்கு 1 அல்லது 2 விற்பனைகளும் நடைபெறலாம். ஆனால் அது எந்தநாளும் விற்பனைகளை தரும் Gig ஆக அமையாது. அதனால் Gig ஐ உருவாக்க 1-2 நாட்களை நீங்கள் எடுத்துகொண்டாலும் பரவாயில்லை. ஏனெனில் தூரநோக்கு அவசியம்.. 10-20 நிமிடங்களில் Gig ஐ உருவாக்கி 10 விற்பனைகளுடன் நின்றுவிடாமல் 1-2 நாட்களையேனும் எடுத்துகொண்டு நிதானமாக Gig ஐ உருவாக்கிகொள்ளுங்கள்.. அது பிற்காலத்தில் 1000000$ கூட சம்பாதித்து தரலாம்.

சிறந்த Gig ஐ உருவாக்கும் பொழுது கவனத்தில் கொள்ளவேண்டிய சில விடயங்கள்



  • DEMAND - நாம் முந்தைய பதிவில் கலந்துரையாடிய விடயங்கள் இதனுள் அடங்கும். எப்படி கேள்வி உள்ள Gig ஐ தெரிவு செய்வது என்பதை பற்றி ஆராய்ந்தோம். அதனால் அதைப்பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை.

  • PROFESSIONALISM  - Fiverr ல் எந்த வேலை செய்தாலும் இது மிக முக்கியம். நீங்கள் செய்யப்போகும் வேலையை பற்றி முழுதாக தெரிந்திருப்பது நல்லது. நீங்கள் அவ்வேலையை செய்ய சிறந்தவர் என்பதை Buyer ற்கு காண்பிக்க வேண்டும். 

  • ATTRACTIVENESS - கவர்ச்சி என்பது மிக முக்கியம். ஏனெனில் பல்லாயிரக்கணக்கான Gig களில் நம் Gig ஐ தெரிவு செய்து Buyer வேலையை வழங்க வேண்டும் என்றால் நிச்சயம் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். அழகாக Images/ Videos பாவித்து இதனை கவர்ச்சிகரமாக உருவாக்கிவிடலாம்.

சாதாரணமாக Gig ஒன்றை உருவாக்குபவர்கள் யாருடையாவது Gig ஒன்றை பார்த்து அதைபோல Image கூகிலில் தறவிறக்கி அதை இங்கு பதிவேற்றி, சிறிதாக ஒரு Description ஐ எழுதி Publish செய்வார்கள். அவ்வாறு உருவாக்கப்படும்  Gig ல் குறைபாடுகள் அதிகமாக காணப்படும். 

சரி, குறைபாடுகள் இல்லாமல் Gig ஒன்றை உருவாக்குவது எப்படி என்றால், கீழ்வரும் காரணிகளை கருத்தில்கொண்டால் மட்டுமே அது முடியும். 

01. GIG TITLE


இதுதான் Gig ஒன்றில் முக்கியமான விடயம். தலைப்பு தௌிவாகவும் அர்த்தபூர்வமாகவும், கவர்சிகரமாகவும் இல்லையென்றால் Buyer அந்த Gig பற்றி சிந்தித்துகூட பார்க்மாட்டார். கொஞ்சம் சிந்தியுங்கள் First Impression is Best Impression என்று கூறுவார்கள். Gig ஒன்றில் முதலில் தெரிவது இந்த தலைப்புதான், ஆகவே தலைப்பை இடும் பொழுது சற்று சிந்தித்து தௌிவாக இடுங்கள். 


தலைப்பை எழுதும் பொழுது நீங்கள் ஒரு Buyer என்ற ரீதியில் சிந்தியுங்கள். அப்பொழுதுதான் அது மிகச்சரியாக அமையும். தலைப்பில் நீங்கள் என்ன விற்பனை செய்கிறீர்கள் என Buyer ற்கு தௌிவாக புரியவேண்டும், அதனால் சரியாக என்ன விற்பனை செய்யபோகின்றீர்கள் என தௌிவாக சொல்லுங்கள். என்னுடைய Fiverr ஆரம்ப காலங்களில் பெரும்பாலானோர் தலைப்பை நீளமாக எழுதினார்கள், ஆனால் அப்படி செய்ய வேண்டாம்.. தலைப்பு குறுகியதாகவும் அர்தபூர்வமாகவும் இருக்க வேண்டும். 

உதாரணம்  "I will write 500 word Highly TARGETED Search Optimized Article From 5$"

உங்களுக்கு இதில் ஒரு ஐடியா வந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த தலைப்பில் வெறும் Article ஒன்றை விற்பனை செய்வதை மட்டும் கூறாமல் அந்த Article மூலம் Highly Targeted SEO கிடைக்கும் என்பதை தௌிவாக கூறப்பட்டுள்ளது. இதை Buyer பார்த்தால் நிச்சயம் அவர் மனதில் ஒரு Motivation உருவாகும். அதனால் Gig ஐ கிலிக் செய்து உள்ளே வருவார்.

இதே போன்று நீங்கள் தெரிவு செய்த Gig  ஐடியாக்கள் அனைத்திற்கும் 05 தலைப்புகள் வீதம் எழுதிக்கொள்ளுங்கள். ஒரு தலைப்பு மட்டும் எழுதும் பொழுது அது சிறந்ததாக அமையாதவிடத்து 05 எழுதினால் அதில் ஒன்றேனும் சிறந்ததாக அமையும்.


02. GIG IMAGES


இதுவும் தலைப்பை போன்றே மிக முக்கியமானதொரு விடயம், காரணம் வார்த்தைகளால் விபரிக்க முடியாத பலவற்றை படங்கள் மூலம் விபரித்துவிடலாம். நாம் எந்த அளவிற்கு Professional என்று காண்பிக்க இதுதான் சிறந்த வழி. பெரும்பாலானோர் இதனை பிழையாக பயன்படுக்கின்றார்கள். கூகிலில் தேடி தறவிறக்கப்பட்ட படங்களை இங்கு பதிவேற்றுகிறார்கள். அவ்வாறு செய்ய முற்படாதீர்கள் ஏனெனில் நீங்கள் ஒரு படத்தை பதிவேற்றும் பொழுதே Fiverr ற்கு தெரியும் அது பதிவிறக்கப்பட்டதா? அல்லது நாமாகவே எடிட் செய்து பதிவேற்றியதா என்று. இவ்வாறு செய்வதனால் Fiverr ன் நம்பகத்தன்மையும் இழக்கப்படுகின்றது. Fiverr Featured போன்ற உதவிகள் Fiverr ல் பெற்றுக்கொள்ள இவ்வாறு பிழைகளை செய்யாமல் இருப்பதே சாலச்சிறந்தது.

682px * 459px இது Gig படங்களில் சரியான அளவாகும். இந்த அளவில் படங்களை எடிட் செய்து பதிவேற்றுங்கள். அத்துடன், “Exclusively on Fiverr.com” என்ற வார்த்தையை அப்படத்தில் எங்காவது தெரியும்படி இடுங்கள். காரணம் இதுவும் Fiverr ன் நம்பகத்தன்மையை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

எடிட் செய்யும் பொழுது முடிந்தளவு அழகாக எடிட் செய்யுங்கள். 03 படங்களை நீங்கள் ஆரம்பத்தில் பதிவேற்றலாம், போக போக அதிகமாக படங்களை பதிவேற்ற இடம் கிடைக்கும். 03 படங்களும் ஒரே படமாக இருத்தலாகாது. அதனால் 03 படங்கள் எடிட் செய்யுங்கள், அத்துடன் இம்மூன்று படங்களிலும் நீங்கள் வழங்கும் சேவை தொடர்பாக முழுமையாக குறிப்பிடப்படல் வேண்டும். வழங்கும் சேவை + ஏனைய Gig களைவிட அதிகமாக நீங்கள் வழங்கும் Feature என்னவென்றும் குறிப்பிட மறந்துவிடாதீர்கள். படத்தில் முக்கியமானவற்றை Highlight செய்யுங்கள்.

நீங்கள் ஏன் இந்த Gig ஐ விலை கொடுத்து வாங்க வேண்டும்? வாங்கினால் என்ன கிடைக்கும்? யாருக்கு இந்த சேவை பொருந்தும்? என்பவற்றை மனதில் வைத்து படத்தை உருவாக்கினால் அது சிறந்ததாக அமையும்.

நான் முழுமையாகவே, என் படங்களை போட்டோஷாப் உதவியுடன் உருவாக்கியுள்ளேன். சிலவேலைகளில் போட்டோஷாப் பற்றி உங்களுக்கு எந்த அறிவும் இருக்காது. ஆனால் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இணையம் இருக்கும் வரை யாரும் உங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை. அனைத்தையும் இணையம் வாயிலாக கற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் தெரிவு செய்த Gig அனைத்திற்கும் ஒன்றிற்கு 03 படங்கள் வீதம் 20*03 = 60 படங்களை எடிட் செய்துகொள்ளுங்கள். உங்களால் முடியவில்லை என்றால் தெரிந்தவர்கள் உதவியை நாடலாம்.

03. GIG VIDEO


தலைப்பு, படங்கள் போலவே Buyer ஐ நம்வசம் ஈர்க்க இதும் சிறந்த வழிதான்.  Fiverr Gig ற்கு வீடியோ ஒன்று பதிவேற்றக்கூடிய வசதியினை Fiverr அறிமுகப்படுத்தியதில் இருந்து இன்றுவரை கண்டிப்பாக வீடியோ ஒன்றை உருவாக்கி பதிவேற்றுமாறு பரிந்துரை செய்கின்றனர். காரணம், உண்மையில் வீடியோ ஒன்றின் மூலம் விற்பனையை 70% அதிகரித்துகொள்ள முடியும். ஆனால் ஆரம்பத்தில் நான் வீடியோ போடவில்லை.. ஆனால் பிறகு வீடியோ ஒன்றையும் பதிவேற்றினேன்.

உண்மையில் வீடியோ என்றதுமே நீங்கள் கமரா முன்பு தோன்றி உங்கள் சேவையை பற்றி கூற வேண்டுமென்றே அவசியமில்லை. ஆனால் அவ்வாறு செய்தால் மேலும் நம்பகத்தன்மை அதிகரிக்கும். வீடியோவில் உங்கள் குரலாவது இருந்தாலும் கொஞ்சம் நல்லதுதான். ஆனால் தயவு செய்து ரோபோ போன்ற குரல் இட்டு வீடியோ உருவாக்க வேண்டாம்.. அவற்றை Fiverr ஏற்றுக்கொள்வதில்லை. Gig பற்றி சரளமாக கூறி ஒரு வீடியோ உருவாக்குங்கள்... படங்கள் உருவாக்கும் பொழுது நாம் செய்தபடியே “Exclusively on Fiverr.com” / "Fiverr Logo" என்பவற்றை அவற்றில் இடுங்கள். அழகான பின்னிசை ஒன்றை இடுங்கள்.. நீங்கள் கதைக்கும் வீடியோ என்றால் மெல்ல கேட்குமாறு அதனை பயன்படுத்துங்கள். Gig Exra இருந்தால் அதனையும் வீடியோவில் குறிப்பிட மறந்துவிடாதீர்கள். 



03. GIG DESCRIPTION 



Buyer எப்பொழுதும் தலைப்பை பார்த்துவிட்டு அடுத்து பார்ப்பது இந்த Description ஐ தான். அதனால் இவ்விடத்தில் உங்கள் சேவையை பற்றி சரியாக குறிப்பிடவில்லை என்றால் அந்த விற்பனை தடைபட்டு செல்ல வாய்ப்புண்டு. அதனால் பின்வருமாறு ஒரு வடிவத்தில் அதனை எழுதுங்கள். 

========================================================================
நீங்கள் வழங்கும் சேவையில் பெறுமதி (பணத்தில் அளவு அல்ல, Buyer ற்கு அது எவ்வளவு பெறுமதி)
========================================================================
  இவ்விடத்தில் நீங்கள் வழங்கும் சேவையை விபரித்து எழுத வேண்டும், Gig Exras பற்றியும் Features பற்றியும் எழுத மறந்துவிடாதீர்கள். 
========================================================================
இவ்விடத்தில் Buyer ஏன் நம் சேவையை பணம் கொடுத்து வாங்க வேண்டும்? இதுவரை செய்துமுடித்துள்ள Projects, Fiverr Levels, Experience, Reviews மற்றும் Buyer நமக்கு Project ஐ வழங்கினால் அதனை ஆரம்பிக்க தேவையான விடயங்கள்
========================================================================


04. GIG TAGS



டெக்ஸ் எழுதும் பொழுது நாம் பின்பற்ற வேண்டிய விடயங்கள் என்னவெனில் ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் பாவிக்காமல் எழுதவேண்டும். அவ்வாறு இல்லையெனில் Fiverr அதனை நிராகரித்துவிடும். அதனை தவிர டெக்ஸ் இட தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கின்றேன். காரணம் SEO பற்றி நாம் பேசும் பொழுது இந்த டெக்‌ஸ் அதில் அதிகளவாக பேசப்படும். இப்போதைக்கு நீங்கள் வழங்கப்போகும் சேவைக்கு அமைவாக தெரிந்தளவில் டெக்‌ஸ் வழங்குங்கள். SEO பற்றி பேசும் பதிவில் அவற்றை தௌிவாக பார்க்கலாம். 



No comments:

Post a Comment

தயவு செய்து உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடவும்.. உங்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் / கேள்விகளை வைத்துதான் எமது பதிவுகள் தொடர்ந்து வர காத்திருக்கின்றன