Sunday, January 6, 2019

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க மிக சரியான வழிமுறை எது?


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள், உண்மையில் இணையம் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் கையாளும் பிரதான வழிகளில் 100% பயன்தரக்கூடிய வழிகளைப்பற்றியும், அவற்றை எவ்வாறு செய்வது என சிறிது விளக்கங்களுடன் இப்பதிவில் உங்களை சந்திக்க நான் வந்துள்ளேன். நான் உங்கள் ஹிந்துஜன். 

அன்லைனில் பணம் சம்பாதிக்க எண்ணம் வந்தவுடனயே நம்மவர்கள் என்ன செய்வீர்கள் என்றால் கூகிலில் சென்று தேடுவீர்கள். 


இவ்வாறு தேடும் பொழுது உங்களுக்கு கிடைக்கும் Search Result ல் பல்வேறு முறைகள் உங்களுக்கு காண்பிக்கப்படும். காண்பிக்கப்பட்ட முறைகளை நம்மவர்கள் தமிழில் இடப்பட்டுள்ள பதிவுகளை வாசித்து தைப்போல் நீங்களும் செய்துபார்த்திருப்பீர்கள் என்பது என் நம்பிக்கை. அப்படி செய்திருப்பீர்களாயின் நிச்சயமாய் உங்கள் மனதில் ஆன்லைனில் சம்பாதிக்க முடியாது என்ற முடிவில்தான் இப்பொழுது இருப்பீர்கள். மற்றும் இப்பதிவில் மட்டும் என்ன புதிதாய் இருந்துவிடப்போகின்றது என்ற எண்ணத்துடன்தான் இப்பதிவையும் வாசிக்க வந்திருப்பீர்கள். காரணம் கூகிலில் நீங்கள் தேடினால் (தமிழில்) யூட்டியுபிலும் கூட நம்மவர்கள் பெரும்பாலாக பொய்யான பதிவுகளையே இட்டுருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது. அவ்வாறு இடப்பட்ட பதிவுகள் அனைத்தும் பொய்யானவை என்று நான் கூறவில்லை. ஆனால் நிச்சயம் பெரியதொரு மாற்றத்தை அவவை உங்களில் ஏற்படுத்தியிருக்காது. உண்மை நிலை அவ்வாறாயின் 

ஆன்லைனில் பணம் சம்பாதிக்கக்கூடிய 100% பயன் தரக்கூடிய வழிகள் என்ன? 
என்று என்னிடம் நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அதற்கு முன்பதாக ஏன் இவ்வாறு நடக்கின்றது. என்று புரிந்துகொண்டால் நிச்சயம் இனிமேல் சரியான வழிகளை இனம்காண உங்களுக்கு இலகுவாக இருக்கும்.



Ads Clicking மற்றும் PTC Sites.


மேற்கூறியவாறு நீங்கள் தேடும் பொழுது முதலில் உங்களுக்கு புலப்படும் விடயங்களில் முக்கிமான ஒன்றுதான் Ads Clicking மற்றும் PTC Sites. இம்முறைகளை பயன்படுத்தலாமா? என்று கேட்டால், இம்முறைகள் இருக்கும் பக்கம் தலைவைத்துகூட படுக்க வேண்டாம் என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் கனவில் கூட இம்முறைகளில் பணம் சம்பாதிக்க உங்களால் முடியாது. காரணம்  Ads Clicking தளமொன்றில் அர்த்தமற்ற வாசகர்களுக்காக எந்த நிறுவனமும் (அவர்கள் கூறுவது போல்) பணம் வழங்க தயாராக இல்லை.

சற்று சிந்தியுங்கள், உதாரணத்திற்கு நீங்கள் ஒரு PDF Software வைத்திருக்கின்றீர்கள். உங்கள் தளத்திற்கு பயனர்களை வரழைக்க நீங்கள் உங்கள் விளம்பரங்களை Ads Clicking / PTC தளமொன்றிற்கு வழங்குகின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். பிறகு நான் அந்த Ads Clicking / PTC தளத்தில் புதிய கணக்கொன்றை ஆரம்பிக்கின்றேன். பிறகு உங்கள் PDF Software  இருக்கும் தளத்திற்கு Ads Clicking / PTC முறைகள் மூலம் வருகைத்தருகின்றேன். 05 செக்கன்கள் காத்திருக்கின்றேன். பிறகு அப்பக்கத்தினை துண்டித்துவிடுகின்றேன். 

இப்பொழுது மேற்கூறிய சம்பவத்தினை வைத்து பார்த்தால், உங்கள் PDF Software தளத்திற்கு வரும் நான் PDF Software வை விலை கொடுத்து வாங்கும் நோக்கத்துடன் வரவில்லை. மாறாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வந்துள்ளேன். ஆகவே எனது வருகை உங்களுக்கு பயனளிக்காது. பயனளிக்காத என் வருகைக்காக நீங்கள் பணம் வழங்குவீர்களா??? அப்படி வழங்கினாலும் அதில் உங்களுக்கு என்ன கிடைத்துவிடும். ஏமாற்றத்தை தவிர.??

அதெல்லாம் சரி, ஆனால் Ads Clicking / PTC தளங்களில் பணம் சம்பாதித்துள்ள நபர்களை நான் இணையத்தின் பதிவுகளின் மூலம் பார்த்திருக்கின்றேனே! 

 இப்படி தோன்றுகிறதா? கீழே பாருங்கள்...


இது அவ்வாறானதொரு பதிவு, பதிவை வாசிக்கும் அனைவருக்கும் நிச்சயம் ஒரு நம்பிக்கை வந்துவிடும். அப்படி எழுதப்பட்டிருக்கின்றது, ஆனால் பதிவின் படி, Ads Clicking மற்றும் PTC தளங்களில் கணக்குகளை ஆரம்பிக்க நமது Mouse Pointer ஐ காட்டப்பட்டிருக்கும் படத்தின் மேல் கொண்டுசென்றால் கீழ்வருமாறு காட்டும். 


அப்படி காட்டப்படும் லிங்க்கிற்கு தான் நீங்கள் கணக்கினை திறக்க செல்வீர்கள். உண்மையை சொன்னால்,  அந்த லிங்கினை கிலிக் செய்து நீங்கள் அந்த தளத்தில் கணக்குகளை திறந்தால் இப்பதிவை எழுதியவருக்கு பணம் கிடைக்கும். அது 5-25$ வரை கிடைக்கலாம். அப்படி கிடைத்தவர்களையும் இதுவரை நான் பார்த்ததில்லை. நீங்கள் பார்த்திருப்பின் கீழே கெமென்ட் பாக்சில் பதிவிடவும்.

இவ்வாறான தவறான வழிகாட்டல்களினால்தான், புதிதாக இணையத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் முயற்சிகளை செய்பவர்கள் இறுதியில் தோல்வியடைகின்றார்கள். நானும் அப்படித்தான் என் பயணத்தை ஆரம்பித்தேன்.

Ads Clicking மற்றும் PTC தளங்கள் வெற்றியளிக்காவிடின் எந்த முறைகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம்??

என்னுடைய அனுபவம் மற்றும் நான் கற்ற விடயங்கள் அடிப்படையில்


  • Content Marketing 
  • Freelancing
  • Affiliate Marketing
  • Dropshipping
  • Membership Websites
  • E-Mail Business
  • Online Store
 போன்ற வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும். சரி, இப்பபொழுது இதில் ஒவ்வொன்றாய் தனித்தனியே பார்க்கலாம்.


CONTENT MARKETING 

இது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க ஒரு சிறந்த வழிமுறைதான். நமது படைப்புகளை எழுத்துமூலமாக அல்லது வீடியோ மூலமாக இணையத்தில் பதிவேற்ற வேண்டும். எழுத்துமூலமாக பதிவேற்ற Blog அல்லது Website ஒன்று ஆரம்பிக்கலாம். Website ஒன்றை வடிவமைக்க எனக்கு தெரியாதே என்பவர்கள் Blog ஒன்றின் மூலம் உங்கள் பயணத்தை தொடங்கலாம்.

Wordpress மற்றும்  Blogger  போன்ற தளங்களில் உங்கள் பிலாக் ஐ இலவசமாக ஆரம்பிக்கலாம். இதற்கு பாரிய கணினி அறிவு அவசியமற்றது. சாதாரண கணினி அறிவே போதுமானது. ஆரம்பித்து எழுத்து மூல பதிவுகள் தொடர்ந்து இடும் பொழுது வாசகர்கள் வர ஆரம்பிப்பார்கள். வாசகர்கள் அதிகரித்த பின்னர் அத்தளத்தை விளம்பரப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும். வாசகர்கள் வருகை அதிகரிக்க அதிகரிக்க உங்களுக்கு வருவாய் கிடைக்கும். உதாரணத்திற்கு Google Adsense என்ற சேவை மூலம் விளம்பரங்களை நம்பிக்கையுடன் பெற்று அவற்றை பயன்படுத்தலாம்.

அவ்வா​றே உங்கள் வீடியோ பதிவுகளை பதிவேற்ற யூடியுப் உங்களுக்கு பயனுள்ளதாய் அமையும். எழுத்து மூல பதிவுகளை போலவே வீடியோ பதிவுகளை யூட்டியுப்பில் பதிவேற்றி பார்வையாளர்களை கவர்வீர்களாயின் நிச்சயம் பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள். பின்தொடர்பவர்கள் (Subscribers)  1000 ற்கு மேல் அதிகரிக்க உங்கள் Watch Time 4000 Hours ஐயும் தாண்டியவுடன்  Google Adsense கணக்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். (அதற்கு முன்பதாகவும் விண்ணப்பிக்கலாம், ஆனால் 1000 Subscribers & 4000 Watch Hours ஐ கடந்தவுடன் விண்ணப்பிப்பது சாலச்சிறந்தது.)

குறிப்பு:Content Marketing பகுதியில் Blog / Website / Youtube Channel பற்றிய பதிவுகள் அதிகமாகவே இணையத்தில் தமிழ் மொழியில் உள்ளன. ஆகையால் அதைப்பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. எனினும் முழுமையாக இணைய வியாபாரமொன்றை ஆரம்பிப்பது எப்படி என பதிவுகள் இடும் பொழுது இம்முறைகள் அப்பதிவுகளில் சிறு பகுதியாகவும் (இதுவரை எந்த பதிவிலும் இல்லாத Advanced விடயங்களுடனும்) வரக்காத்திருக்கின்றது.  
இவை இரண்டையும் ஆரம்பிக்க முன்னராக, சிறந்த Niche ஐ தெரிவு செய்ய வேண்டும். அதாவது, உங்களுக்கு என்ன வெற்றியை தரக்கூடுமோ, அதை சரியாக இனம்காண வேண்டும். எப்படி இனம்காண்பது? என்பது இப்பொழுது உங்கள் கேள்வியாக இருக்கக்கூடும். சுருக்கமாக கூறினால், உங்களுக்கு எது Passion ஆக அமைகின்றதோ, அதுதான் உங்கள் Niche. ஏனெனில் உங்களுக்கு மிகவும் பிடித்த விடையங்களை செய்யும் பொழுது சந்தோசமாக இருப்பீர்கள். அத்துடன் பிடித்த விடயங்கள் பற்றி யாதேனும் ஒரு அளவிற்காவது அறிந்திருப்பீர்கள், தேர்ச்சிப்பெற்றிருப்பீர்கள். ஆகவே உங்கள் Niche  அதுவாகத்தான் அமைய வேண்டும். மாறாக மற்றவர்கள் அதை செய்கிறார்கள், இதை செய்கிறார்கள் என்று எண்ணி நாமும் அதை செய்ய நினைத்தால் உங்கள் பயணம் குறுகியதாகிவிடும். ஏனெனில் ஒரு கட்டத்திற்கு மேல் அதனை கொண்டுநடாத்த முடியாது.

Niche  ஐ தெரிவு செய்தவுடன், அடுத்ததாக Keyword Research செய்ய வேண்டும். Keyword Research ஆ?? என்ன அது? என்று கேட்பது புரிகிறது. இணையத்தில் உலகில் என்னென்ன வார்த்தைகளை தேடல் பொறிகளில் தேடுகின்றார்கள் என்பதை ஆய்வு செய்வது Keyword Research  ஆகும். அவ்வாறு செய்து, உங்கள்
Niche ல் எந்தெந்த Keyword களுக்கு கேள்வி இருக்கிறது என்று தெரிந்துகொண்ட பின்னர், உங்கள் வேலைகளை ஆரம்பித்தால், மிக விரைவாக வெற்றிதரும்.  அதிலும் SEO - Search Engine Optimization மிக முக்கிய பங்கினை வகிக்கும். அதைப்பற்றியும் தொடர்ந்து வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.

முறையாக Keyword Research செய்வது மற்றும் Advanced SEO பற்றிய அனைத்தும் எம் பதிவுகளில் தொடர்ந்து வரும்..! காத்திருங்கள்...!

FREELANCING 

Freelancing என்பதும் இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த வழிமுறையாகும். நம்மால் கணினியை பயன்படுத்தி செய்யக்கூடிய வேலைகளை சிறிய சிறிய Project களாக பெற்று அதனை செய்து கொடுத்து அதற்கான பெறுமதியை பெற்றுக்கொள்ளும் முறை இதுவாகும். 


இதைப்பற்றிய பதிவு தொடர் என் தளத்தில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன் ,ஆகையால் இதைப்பற்றியும் இப்பதிவில் பேசுவது நல்லதல்ல. கீழே உள்ள லிங்'களை உபயோகித்து அப்பதிவுத்தொடரில் இணையலாம். 



(பதிவுத்தொடரில் இணைய மேலே உள்ள பச்சை நிற பொத்தானை அழுத்தவும்)




AFFILIATE MARKETING

Affiliate Marketing என்பது ஒரு மூன்றாம் நபர்  ஒருவரின் பொருளை நாம் விளம்பரங்கள் செய்து அதனை விற்பனை செய்து கொடுக்கும் பெழுது நமக்கு அதன் மூலம் கிடைக்கும் தரகுப்பணம் என்று சொல்லலாம். மேலே Ads Clicking / PTC தளங்கள் பற்றி நான் உதாரணம் காட்டிய பதிவிலும் கூட ஒருவிதமான Affiliate Marketing  தான் நடைபெற்றுள்ளது. இதனை செய்ய Click Bank / Amazon / Flipkart  போன்ற தளங்களில் Affiliate Partner Program ல் இணைவதன் மூலம் விற்பனை செய்ய பொருட்களின் Ref Link களை பெறலாம். அந்த Link களை நமது பிலாக், அல்லது யூட்டியுப் சேனலில், இணையத்தளத்தில் இட்டு பணம் சம்பாதித்துக்கொள்ளலாம்.




மேலே உள்ள படம் உங்களுக்கு Affiliate Marketing எப்படி வேலை செய்கின்றது என்பதை பற்றி தௌிவாக காண்பிக்கும் என்பது என் நம்பிக்கை. Affiliate Marketing செய்து பணம் சம்பாதிக்க கிலிக் பாங்க், அமேசன், பிலிப் கார்ட் ஐ தவிர ஏராளமான தளங்கள் உள்ளன. வளர்ந்துவரும் அநேகமான தளங்களில் Affiliate Marketing புரோகிராம் வைத்துள்ளார்கள். இவற்றின் மூலம் 75% வரையிலும் Commission பெறலாம்.  காரணம் அப்படி ஒரு புரோகிராம் வைக்கும் பொழுது அவர்களது பொருள் / சேவையின் விற்பனை மேம்படுமல்லவா? ஆகையால் நாம் Affiliate Marketing முறையை பயன்படுத்தும் பொழுது தவறான பொருட்கள் / சேவைகளை விளம்பரப்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

DROPSHIPPING 

பொருட்களை இணையத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுதே நமக்கு ஏற்படும் முதல் கேள்வி, விற்பனை செய்ய பொருட்கள் நம்மிடம் உள்ளதா?  விற்பனை செய்தாலும் வௌிநாட்டவருக்கு அது தரமாக இருக்குமா? எப்படி விற்பனை செய்வது? இவ்வாறுதான் தோன்றும். அதற்கு சிறந்த தீர்வாகத்தான் இந்த ட்ராப்சிப்பிங் (Dropshipping) முறை கருதப்படுகின்றது. இம்முறை மூலம் பொருட்கள் / சேவைகள் நம்மிடம் இல்லாதபோதும் விற்பனைகளை செய்யலாம். 

உதாரணத்திற்கு, பக்கத்து வீட்டு ஆண்டிக்கு GAS சிலிண்டர் தேவைப்படும் பொழுது 1200/- வாங்கிக்கொண்டு (உண்மை விலை 1000/- எனின்) கடை தெருவிற்கு சென்று அதனை வாங்கி, வாடகைக்கு முச்சக்கர வண்டியை அழைத்து அதற்கு 50/- கொடுத்து ஆண்டியின் வீட்டிற்கே Home Delivery செய்திருக்கும் அனுபவம் பலருக்கு உண்டு. அதில் 150/- இலாபம்.

இவ்விடத்திலும் விற்பனைதான் நடந்தது, ஆனால் பொருள் நம்மிடம் இருந்ததா? (கொடுக்கல் வாங்கல் நடைபெறும் பொழுது). அவ்வாறேதான் இம்முறையை International ஆக செய்தால் அதுதான் Dropshipping ஆகும். 


இதற்கு நாம் முதலில் Aliexpress ல் சென்று விற்கக்கூடிய பொருட்களை தெரிவு செய்துகொண்டு Store ஒன்றை உருவாக்க வேண்டும்.. (Ebay Amazon Flipkart போன்று) தெரிவு செய்த பொருட்களின் படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை பதிவேற்றி  வாடிக்கையாளர்களுக்கு சென்றடையும் விதத்தில் விளம்பரங்கள் செய்து Orders களை பெற வேண்டும்.  Orders களை பெற்றவுடன் அப்பொருளை கேட்டு பணம் நம் கணக்கில் Debit ஆகிவிடும்.  Debit  ஆகிய பணத்தில் பொருளுக்கான பணத்தை மட்டும் கொடுத்து  Aliexpress ல் சென்று பொருளை நாம் Buy செய்ய வேண்டும். அவ்விடத்தில் Delivery செய்ய முகவரியை கேட்கும் பொழுது நம்மிடம் Order வழங்கிய வாடிக்கையாளரின் முகவரியை வழங்க வேண்டும். அப்பொழுது பொருள் நேராக நம் வாடிக்கையாளரின் வீட்டிற்கு செல்லும். 


இம்முறையினை பயன்படுத்தி பல கோடிகள் சம்பாதிக்கலாம், அது உண்மைதான். ஆனால் எல்லாம் ஒரு முறையாக செய்யவேண்டும். படிப்படியாக எம் தளத்திலும் என் யூட்டியுப் செனலிலும் இது சம்பந்தமாக நீங்கள் பதிவுகளை பார்வையிடலாம். ஆகையால் தொடர்ந்து எமது பதிவுகளை வாசிக்க மறக்காதீர்கள். சில வேலைகளில் எம் பதிவுகள் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். அதனால் வலது புறத்தில் உள்ள Facebook group ல் இணைந்துகொள்ளவும்.

MEMBERSHIP WEBSITE

பொதுவாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் முறைகளில் இதுவும் ஒரு சிறந்த முறையாகும்.. அதாவது சந்தா பணம் அறவிடும் முறைதான் இதுவும். நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு யாதேனும் ஒரு விடயத்தை  Offer செய்யலாம். உதாரணத்திற்கு உங்களுக்கு நன்றாக கணினி கற்பிக்க தெரிந்திருந்தால், அன்லைனில் ஒரு Webinar Service நடாத்தலாம். மனிதர்கள் வகுப்பறைகளை தேடி கற்ற காலம் போய் இப்பொழுதெல்லாம் ஆன்லைனில் மட்டும் கற்கும் காலம் வந்துவிட்டது.



இதை தவிர Magazines, Podcast என பல சேவைகளை வழங்கலாம். (நீங்கள் வழங்கும் சேவை உங்கள் மனதில் எழுவதாக அமையும், உங்களால் சமைக்க முடியுமென்றால் மாதாந்த / வருடார்ந்த Membership பெற்றுக்கொண்டு அதைகூட சொல்லிகொடுக்கலாம்) தளங்களை உருவாக்க தெரியாதபோது Facebook Group (Private) களில் இணையக்கூட பணம் பெறலாம். ஆனால் அதற்கு வாடிக்கையாளர் பணம் செலுத்தும் அளவிற்கு உங்கள் சேவை சிறப்புற அமைய வேண்டும்.


No comments:

Post a Comment

தயவு செய்து உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடவும்.. உங்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் / கேள்விகளை வைத்துதான் எமது பதிவுகள் தொடர்ந்து வர காத்திருக்கின்றன