Wednesday, December 12, 2018

Freelancing அறிமுகம் | Freelancing Introduction in Tamil




















இணையம் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது இனுயும் ஒரு இரகசியம் அல்ல. Freelancing என்பது சிறிய சிறிய Projects செய்து கொடுத்து அதற்கான
பெறுமதியை வருவாயாக நாம் பெறும் ஒரு முறையாகும். இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் பிரதான வழிகளில் இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் முன்னறிவு அற்றவர்களுக்கு இந்த Freelancing ஒரு சிறந்த ஆரம்பத்தை வழங்கும் என்பது என்னுடைய நம்பிக்கையாகும்.

சிலவேலைகளில் இதற்கு முன்பதாக நீங்கள் Fiverr பற்றி அறிந்தீராமல் இருக்கலாம்.. அப்படியாயில் கூகிலில் Fiverr பற்றி தேடிப்பார்த்தீர்களாயின் சிறியதொரு அறிவை பெறலாம். எனினும் இந்த பதிவுகளை தொடர்ந்து வாசிப்பீர்களாயின் அதைப்பற்றி முழுமையான அறிவினை நீங்கள் பெறலாம். 

Fiverr என்பதை சரளமாக விளக்கினால், 5$ ற்கு எந்தவொரு பொருள்/சேவையை விற்பனை செய்ய உதவும் ஒரு பாரிய Marketplace ஆகும். ஆனால் 5$ மட்டும் என்பது உங்கள் ஆரம்பமாக அமையுமே தவிர காலம் செல்ல செல்ல அனுபவம் நிறையும் பொழுது 10000$ வரையிலும் கூட ஒரு Project ற்கு பெற்றுக்கொள்ளலாம்.. இந்தியா மற்றும் இலங்கையிலும் கூட நம்மவர்கள் வாழ்க்கைக்கு தேவையான பிரதான வருமானத்தை இந்த Fiverr மூலம் பெற்றுகொள்கின்றார்கள். 


Fiverr என்பது ஒரு பாரிய Marketplace ஆகும். இதனுள் 5$ ற்கு வழங்கக்கூடிய சேவைகள் ஏராளம், உதாரணத்திற்கு நாம் ஒரு Shopping Complex ஒன்றிற்குள் சென்றால் அங்கு பலதரப்பட்ட பொருட்கள்/ சேவைகள் இருக்கும். நாம் உள்ளே செல்வது ஒரு திரைப்பட இறுவட்டை விலைகொடுத்து வாங்கவெனில் அதனை வாங்கிவிட்டு வௌியே வரும் பொழுது அத்திரைப்படத்தில் வரும் கதாநாயகனின் படம் அச்சிடப்பட்ட ஆடைகளை காண்கிறோமெனில் நாம் அதன்மீதும் ஆசைகொண்டு அதனையும் வாங்கிவிட்டு வீடு திரும்புவோம். அதே போன்று Fiverr ல் நாம் விற்பனை செய்யும் பொருள்/சேவைக்கு மேலதிகமாக அதனை தொடர்புடைய அல்லது அதனை போன்ற இன்னுமொரு பொருள்/சேவையினை விற்பனை செய்யலாம். ஆகையால் 5$ என்பது Fiverr ன் ஆரம்பமாக இருப்பினும் அதற்கும் மேலதிகமாக விற்பனைகளை செய்துகொள்வது எமது திறமையில்தான் இருக்கிறது.

"மனிதர்களில் தேவைகளையும் விருப்பங்களையும் அழகாக நேர்த்தியாக நிறைவேற்றும் பொழுது அதற்கு கேள்வி அதிகமாகின்றது"

01. ஏன் Fiverr?


Freelancer, Odesk போன்ற Freelancing இணையத்தளங்கள் ஏராளமாக இருப்பினும் நீங்கள் ஆரம்பிக்க Fiverr தான் சிறந்தது என நான் பரிந்துரை செய்ய பின்வரும் காரணங்கள்தான் என் மனதில் எழுகிறது.


  • 5$ என்பது 700 ரூபா (இலங்கையில்) ஆகும். ஆகவே 5$ ற்கு Risk எடுக்க எவரும் பின்னடைவதில்லை, ஏனெனில் ஏனைய தளங்களில் (Freelancer, Odesk போன்ற) 5$ ற்கு இல்லாமல் மிக அதிகமான விலைக்குதான் விற்பனைகள் நடக்கின்றது. 
  • 5$ற்கு கொள்வனவு செய்யும் நோக்குடன் வருகை தரும் வாடிக்கையாளரை நமக்கு தேவையேற்ப Brainwash செய்து மேலதிக விற்பனைகளை மேற்கொள்ள முடியும். 
  • கொஞ்சம் சிந்தியுங்கள், பெரிய பெரிய Projects களுக்கு Outsource செய்துகொள்ளத்தான் பெரும்பாலும் Fiverr ல் வாடிக்கையாளர்கள் உலாவுகின்றார்கள், அதனால்தான் அதிகமாக விற்பனைகள் நடக்கின்றது. 


சரி, Fiverr மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறிய உடனே தயவு செய்து Fiverr ல் கணக்குகளை திறந்துவிட வேண்டாம்.. முதலில் இந்த வலைப்புவில் பதிவிடப்பட்டுள்ள அனைத்து பதிவுகளையும் நன்கு வாசித்து படிப்படியாக செய்ய ஆரம்பியுங்கள்.. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் எனது Fiverr பயணம் அதற்கு சிற்த உதாரணமாக அமையும்.

நான் 2010 ஆகஸ்ட் மாதம்தான் Fiverr ல் கணக்கொன்றை ஆரம்பித்தேன்.. ஆனால் ஆரம்பிக்கும் பொழுது எந்தவொரு முன்னறிவும் இருக்கவில்லை.. இதே போன்ற ஒரு பதிவினை பார்த்துதான் ஆரம்பித்தேன்.. நான் இனை என் நண்பர்களுக்கு சொல்ல என் நண்பர்களும் இணைந்து மொத்தமாக 04 கணக்குகளை (நால்வரும்) ஆரம்பித்தோம்.. அழகாக GIG ஐ தயாரித்து Order வரும் வரும் என நம்பி காத்திருந்தோம்.. மாதங்கள் செல்ல செல்ல நண்பர்களுக்கு சற்று அளுத்து போய்விட்டது.. இதெல்லாம் பொய்யான முயற்சி, சற்றும் பயணில்லை என்று விட்டுவிட்டார்கள்.. ஆனால் நான் விடவில்லை..

தொடர்ந்து முயற்சி செய்தேன்.. ஒரு கட்டத்தில் எனக்கும் இதனை விட்டுவிடவேண்டிய நிலை வந்துவிட்டது.. நானும் விட்டுவிட்டேன்..

2018 ம் ஆனது.. கிட்டத்தட்ட 08 வருடங்களுக்கு பின்னராக நான் என் ஜீமெயில் ற்குள் நுழைந்த பொழுது ஆயிரக்கணக்கான ஈ-மெயில்கள் குவிந்து கிடந்தன.. அதில் அதிகமானவை Fiverr ஆல் அனுப்பப்பட்டது..

மீண்டும்.. தேட ஆசை வர தேட ஆரம்பித்தேன்.. Fiverr Ultimate Post Serious என்ற பதிவு தொடர் கிடைக்க முழுமையாக வாசித்தேன்... (ஆங்கிலத்தில் இருந்தது, எனக்கு ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்) முழுமையாக விளக்கம் தெரியாவிடினும் ஓரிரு வார்த்தைகள் புரிய ஆரம்பிக்க நான் Fiverr கணக்கை ஆரம்பித்தும் Order வராததற்கான காரணத்தை புரிந்துகொண்டேன். மீண்டும் புதிய கணக்கொன்றை ஆரம்பித்தேன்.,, தொடந்து முயற்சி செய்தேன்.. 03 நாட்களில் எனது முதல் Order வந்துசேர்ந்தது..

2010ல் அவ்வளவு முயற்சிகள் செய்தும் Order வராதது ஏன் என்றால் Fiverr பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை, ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும்தான் இருந்தது..

அதனால், இப்பதிவுகளை முழுமையாக இறுதிவரை வாசித்து படிப்படியாக உங்கள் Fiverr பயணத்தை தொடர்வீர்களாயின் அதுவே சாலச்சிறந்தது...!

01. சரியான GIG ஐ தெரிவு செய்தல்



02. இலட்சங்கள் தரும் Fiverr Gig ஒன்றை உருவாக்குவது எப்படி?




03. Fiverr Profile ஐ வடிவமைப்பது எப்படி? 




(​மேலும் பதிவுகள் தொடர்ச்சியாக வரக்காத்திருக்கின்றன)


No comments:

Post a Comment

தயவு செய்து உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடவும்.. உங்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் / கேள்விகளை வைத்துதான் எமது பதிவுகள் தொடர்ந்து வர காத்திருக்கின்றன